பிரதான செய்திகள்

சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் சஹீல் மன்சூர் MPயின் நெருங்கியவர்களால் மிரட்டப்பட்டார்.

நேற்று 2016-11-07ம் திகதி திங்கள்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் ஏ.சி.எம் சஹீல் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் உறவினர் உட்பட இருவரால் வீடு தேடிச் சென்று மிரட்டப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் தொலை பேசி அழைப்பின் மூலம் அவர் முக நூலில் பதிவிட்ட சில பதிவுகளையும் நீக்குமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பில் சஹீல் சம்மாந்துறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாதிடம் கொண்டு சென்றுள்ளார்.அண்மைக்கலாமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் ஏ.சி.எம் சஹீல் தனது முகநூலில் பதிவிட்ட பதிவுகளின் எதிரொலியாகவே இது இடம்பெடதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் ஏ.சி.எம் சஹீல் தெரிவித்தார்.இவர் தனது முகநூலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் கொண்டுவரப்பட்ட கைத்தொழில் பேட்டை தொடர்பான செய்திகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவூதி அரேபியா இளவரசரை சந்தித்த ஜனாதிபதி

wpengine

களனிப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர்!

Editor

மின்சார இணைப்புக்காக சொந்த நிதியினை வழங்கிய றிப்ஹான் பதியுதீன்

wpengine