பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் தார் வீதிகளை திறந்து வைத்த அமைச்சர் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியினால் அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தார் வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(10) இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு வீதிகளை திறந்து வைத்தார்.

இதன் போது. அம்பாறை 10ஆம் வீதி, அம்பாறை 12ஏ வீதி, ஹிஜ்றா 02ஆம் வீதி, மதீனா உம்மா வீதி, முகைடீன் மாவத்தை குறுக்கு வீதி, மல் 06ஆம் வீதி என தார் வீதியாக்கப்பட்ட வீதிகள் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம் மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுடீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கட்சிப்போராளிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

காலி உணவகத்தில் தாக்கப்பட்ட சம்பவம் – 11 ஊழியர்கள் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

Maash

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wpengine

கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

wpengine