பிரதான செய்திகள்

சம்பள பிரச்சினை! அரச நிறுவனங்களுக்கு பாரிய பிரச்சினை

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக நாடாளுன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அடுத்து வருடத்தில் அரசாங்க நிறுவனங்களை நடத்திச் செல்ல முடியாத நிதி நெருக்கடி ஒன்று ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த மாதம் அரச ஊழியர்களின் சம்பளம், அரச நிறுவனங்களின் ஏனைய செலவுகள் குறித்து நெருக்கடி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு இடம்பெறவுள்ளது.

அடுத்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் இடைக்கால கணக்கறிக்கை ஒன்று நிதி அமைச்சரினால் நாடாளுன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதனை சமர்ப்பித்து விவாதிப்பதற்கு காலம் ஒன்று அவசியம் என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் அரச நிறுவனங்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது அமைச்சரவை ஒன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசின் பாதகமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்பன்! முசலி வட்டார பிரச்சினை கூட பேசி உள்ளேன் அமைச்சர் றிஷாட்

wpengine

யாழ்நகரில் இரு உணவகங்கள் நீதிமன்றால் சீல் வைப்பு!

Editor

அரசின் அடக்குமுறைகளையும் அழுத்தங்களையும் தாங்கிகொள்ள முடியாது

wpengine