பிரதான செய்திகள்

சம்பந்தன்,சுமந்திரன் இறுதி கிரியை வவுனியாவில்

எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் முச்சந்தியில் வைத்து இறுதிக் கிரியை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த உறவுகள் தாம் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் இரு உருவப்பொம்மைகளை வைத்து இறுதிக்கிரியைகள் செய்தனர்.

இதேவேளை, போராட்ட தளத்திற்கு அருகாமையிலும் நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் முச்சக்கர வண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசமைப்புத்திருத்த வாக்கு ஜாலங்கள்

wpengine

மஹிந்தவுக்கு 100 வீத ஆதரவுபொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர

wpengine

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்

wpengine