Breaking
Sat. Nov 23rd, 2024

எரிவாயு கொள்கலன் வெடிப்பு , எரிவாயு கலவையில் மாற்றம் உட்பட எரிவாயு மோசடிகள் அரசாங்கத்தின் இயலாமையின் பிரதிபலன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நுகர்வோரை பாதுகாக்க இருக்கும் நுகர்வோர் சேவை அதிகார சபையானது தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசாங்கத்தை பாதுகாக்கும் இடத்திற்கு சென்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அம்பலாங்கொடை உடபெரகம பிரதேசத்தில் அறநெறி பாடசாலை கட்டடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் சமையல் எரிவாயுடன் சம்பந்தப்பட்ட 458க்கும் அதிகமான வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவை சாதாரணமான வெடிப்புச் சம்பவங்கள் என துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூறியது நகைப்புக்குரியது.

நுகர்வோர் சேவைகள் அமைச்சர், நிறுவனங்களின் சேவைகள் அமைச்சராக மாறியுள்ளார். முழு அரசாங்கமும் ஒன்றாக இணைந்து நாட்டு மக்களை முட்டாளாக்கி வருகின்றது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *