Breaking
Fri. Nov 15th, 2024

(ஊடகப்பிரிவு)

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது.

இன்று இரவு (03)கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம், சுமார் நான்கு மணி நேரம் இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது.

இதற்கு முன்னதாக இன்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய போது, சிறுபான்மை மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும், அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தது.

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் அம்பாறை, திகன கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பிலான பல உத்தரவாதங்களையும் சந்திப்பின் போது பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டது.

மஹிந்த அரசாங்கத்தில் இருந்து தமது கட்சி வெளியேறி நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்ததன் காரணமே, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே என்றும், அந்த நோக்கம் உரிய முறையில் நிறைவேற்றப்பட பிரதமர் இனிமேலாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் எடுத்துரைத்தது.

பிரதமரிடம் தீர்க்கமான முடிவுகளை பெற்றுக்கொண்ட பின்னரே, கட்சியின் உயர்பீடம் மீண்டும் இன்று இரவு கூடி பிரதமரை ஆதரிப்பது என முடிவு செய்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *