பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல்! விமான நிலையத்தில் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முகமது நிஹான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் நேற்று மலேசியாவிலிருந்து இலங்கை வந்தபோது ரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரியவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது நாடு கடத்தப்பட்ட நிலையில், இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மனம் வைத்தால் எதிர்க்கட்சிகளின் இந்த சதிகளை முறியடிக்கும்

wpengine

வட்ஸ்அப் பாவிப்போர் கட்டாயம் பாருங்கள் உங்கள் அந்தரங்கம் திருடப்படலாம்

wpengine

வாக்குகளுக்காக மட்டுமே எமது சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

wpengine