பிரதான செய்திகள்

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

சமூக சேவையாளாா் சர்வதேச வை.எம்.எம். ஏ. தலைவா், அஷ்ரப் ஹுசைன் (வயது 72)  இன்று (16) காலை காலமானாா்.

 இவா்  கொழும்பு ஜனாசா நலன் புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவா், கொழும்பு லயன்ஸ் கழகத் வடக்கு தலைவா்,  கொழும்பு மத்திய வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு அங்கத்தவா், சமுகம் சாா்ந்த விடயங்களில்  முன்நின்று தமது நன்கொடைகளை வழங்கி உழைத்தவா் ஒரு சமுக சேவையாளாரான அஸ்ரப் ஹூசைன் காலம் சென்ற முன்னாள் அமைச்சா்  எம்.எச். முஹம்மதின் மைத்துனரும் ஆவாா்.

இவரது ஜனாசா கொழும்பு 7 ல் உள்ள ரொஸ்மிட் பிளேசில் வைக்கப்பட்டு இன்று(16) ஆம் திகதி பி.பகல் 07.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related posts

இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

wpengine

இன்று முதல் பயணிகள் பஸ்களில் இடம்பெறும் மாற்றம்!

Editor

சிங்கள ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்வி குறியாக்கி! றிஷாட்டை விமர்சனம் செய்கின்றது.

wpengine