பிரதான செய்திகள்விளையாட்டு

சமூக ஊடகங்கள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர்

ஆசிய கிண்ணத்திற்கான போட்டிகளில் ஏற்பட்ட மோசமான தோல்விகளை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவாகிவரும் கருத்துக்கள் இலங்கை அணி வீரர்களை ஆழமாக காயப்படுத்தியுள்ளன என  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்களின் மனோநிலையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவுசெய்வதை இரசிகர்கள் தவிர்க்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை தோல்விகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது வீரர்களை அவமதிக்கும் நடவடிக்கையாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு என்பது அரசியல் இல்லை நாங்கள் வெற்றிதோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் மேற்கிந்திய அணி மற்றும் தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகளில் எங்கள் வீரர்கள் வெற்றிகளை பெற்றுள்ளனர் இதன் காரணமாக இரண்டு போட்டிகளில் தோற்றமைக்காக அவர்களை சமூக ஊடங்களில் அவமானப்படுத்துவது சரியான விடயமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் கிரிக்கெட் குறித்து சிந்திக்கவேண்டும் என்றால் எங்கள் வீரர்களின் மனோநிலை குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகம் வீழ்ச்சியடைந்துவிட்டது எனகுறிப்பிட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கிரிக்கெட்டை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரவேண்டாம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

மன்னார்,முசலி முஸ்லிம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்!

wpengine

தமிழ் பாடசாலை, தேசிய பாடசாலை தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேக வலயமொன்றை அமைக்க வேண்டும்.

Maash