சமூக வலைத்தளங்களை அவதானமாகவும், நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பயன்படுத்துமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர விடுத்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நிகழ்கால சம்பவங்கள் போன்று சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் தவிர்த்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சில பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கடந்த 21ஆம் திகதி அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த கோர சம்பவத்தின் பின் தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் ஜனாதிபதி உட்பட அனைவரும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவதை தவிரக்குமாறு எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.