Breaking
Sat. Nov 23rd, 2024

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் அவர்களின் கடமைகளை விமர்சித்து, சிறிய குறைகளை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பொய்யான மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவை சுட்டிக்காட்டி சிங்கள ஊடமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,


அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செய்யும் கடமைகளை விமர்சித்து, அவர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, அவர்களை அச்சுறுத்தும் போலியான காணொளிகள் இணைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.


இதற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இணைத்தளங்களில் இப்படியான பதிவுகளை வெளியிடும் நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர், குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *