நமது சமூகத்தின் கட்டமைப்பு கலாச்சாரம் மற்றும் கட்சி அரசியலால் ஒழுங்கமைக்கப்பட்ட து.அதேநேரம் பல நெருடல்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது.
இயற்கையின் பாதிப்புகள் ஒருபுறம் மனித செயற்பாடுகளின் தாக்குதல்கள் மறுபுறம் என தனது கட்டமைப்பை பலவீனமாக்கி உள்ளது.குறிப்பாக அரசியலையே வாழ்க்கையாகவும்,அதுவே சமூகத்தின் தினசரி தேவைப் பொருளாகவும் மாற்றம் கண்டூள்ளது.
இதனால் நாளாந்த வாழ்க்கையில் தனக்கு உரியதை அடைவதிலும்,தனக்கு எதிரானவற்றுக்கு எதிர்நீச்சல் போடுவதற்கும் தயாரான நிலையில் இல்லை.
ஆகவே சமூகத்தின் நிலையான மாற்றத்திற்கும் தேவைகளுக்கும் சமூகத்தின் ஒவ்வொருதனிநபரும் தயார்படுத்தப்பட வேண்டும்.தான் வாழ்கின்ற மற்றும் தனது இருப்பிற்கு அர்த்தமும் வழங்குகின்ற சமூகத்தின் பார்வையாளர்களாக உள்ளோம்.இந்த நிலை மாற்றம் கண்டு நாமும் இந்த சமூகத்தின் பங்காளர் மற்றும் சொந்தக்காரர் என்ற யதார்த்தமான உண்மையை உணர்வு பூர்வமாக சுவாசிக்க வேண்டும்.
தனக்கு தேவையானதை சமூக விழுமியங்களை மீறியும் அடைந்து கொள்கிறோம்.இதன் மூலம் நாம் வாழ்கின்ற சமூகத்தின் சீர்குழைவிற்கு நாமே துணைபோகிறோம்.நமக்கு வேண்டியதை அடைந்து கொள்ள முடியாதபோதுஇநஜத சமூகத்தை விமர்சிக்கிறோம்.அதன்படி இந்த சமூகத்தில் இரட்டை வேடம்பூண்டு நாமே நம்மை பாரமாக்கிக் கொண்டோம்.
ஆதலால் நாம் வாழ்கின்ற சமூகத்தில் விழிப்புணர்வையும் நிலையான கட்டமைப்பையும் முறைப்படுத்துவது மட்டுமல்ல வழிநடத்துவதும் ஒவ்வொருவின் பொறுப்பாகும்.தவறுகளுக்கு துணைபோவதும் பொறுப்புகளை தட்டிக்கழிப்பதும் இந்த சமூகத்தின் மீதுள்ள சாபக்கேடாகும்.
மார்க்க ரீதியான கொள்கைகள்,கட்சிக் கொள்கைகள் மற்றும் பிரதேசவாதங்களால் நமக்குள் பிளவும் பிரிவினையும் இரத்த உறவுகளைக்கூட துண்டாடியுள்ளது.இந்த பிளவுகளின் பரிணாமங்கள் நாம் வாழ்கின்ற சமூகத்தில் நம்மை தனிமைப்படுத்தி உள்ளது.இதன் விளைவாக சமூகத்தின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
ஆகவே நாம் வாழ்கின்ற சமூகத்தில் புரிதல்களும்,பொதுப்படையான உடன்பாடுகளும் நமக்குள் அவசியமாகிறது.அதனை முறையாக நெறிப்படுத்தும் வழிகாட்டல்களை செயற்படுத்த வேண்டும்.அதற்கான செயற்பாடுகளை சமூகத்தின்
அடிமட்டத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டும்.
தொலைந்து போவது ஒரு சுகம். தொலைந்துபோவதை தேடுவது ஒரு சுகம்
இந்த சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.இருந்தும் அதிகமான சந்தர்ப்பங்களுக்கு ஏமாற்றமே விடையாக உள்ளது.இதற்கு இந்த சமூகத்தை வழிநடாத்தும் இளைஞர்களை சுயநலங்களுக்காக வழிநடாத்தும் கலாச்சாரம் மேலோங்கி இருப்பதே காரணமாகும்.ஆதலால் சரியான வழிகாட்டல் மற்றும் வழிநடத்தல்கள் இளைஞர்களுக்கு அவசியமாகும்.
இந்த சமூகத்தில் தனது இருப்பு தொடர்பில் தெளிவோ,ஈடுபாடோ இல்லை.அதாவது தனிமனிதனுக்கு தான் வாழ்கின்ற சமூகத்தில் தனக்குரிய பொறுப்பையும் பங்களிப்பையும் உணரவைக்க வேண்டும்.சுயதேவைகளுக்காகவும்,சுயநலவாழ்க்கைக்காகவும் மட்டுமே பலருக்கு சமூகம் தேவையாக உள்ளது.இந்தவிதமான தனிமனித ஆணவப்போக்கு சமூகத்தின் கட்டமைப்பை நிலைகுலையச் செய்கிறது.
சமூகமயமாக்கல் வேகமாக விரிவடைந்து நவீனத்துவம் அடைகிறது.இதன் சவால்களையும் வேகத்தையும் தனிமனித செயற்பாடுகளின் ஒட்டுமொத்த பயன்பாடுகள் மூலமே சமப்படுத்தலாம்.மாறாக நாகரீகம் என்ற போதையில் தனிமனிதன் சுயநலங்களால் சமூகத்தில் இருந்து தூரமாகிறான்.
நமது கிண்ணியாவின் சமூக ஒழுங்கமைப்பும் புவியியல் ரீதியான நிலப்பரப்பும் தனித்துவமிக்கது.நமக்கான கலாச்சாரம் இதனை மேலும் பலப்படுத்துகிறது.இருந்தும் அண்மைக்கால துரதிஷ்டவசமான செயற்பாடுகளால் சமூகக்கட்டமைப்பு பலகோணங்களில் பலவீனமடைந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சமூகத்தில் தனித்துவிடப்படுவோம்.சமூகத்திற்கு பாரமாக மட்டுமல்ல,நமக்கு நாமே சுமையாவோம்.நமக்குள் சரியான வழிகாட்டல்களும் பொதுப்படையான உடன்பாடுகளும் அவசியமாகிறது.இஸ்லாமிய மார்க்க வழிகாட்டலில் உறுதியானசமூகத்தில் ஒற்றுமையும் மசூறாக்கலும் கூடிய வழிகாட்டல்களே முதன்மை பெறவேண்டும்.ஆனால் இன்று அந்நியவர்களைப் போல தனிமையாகவும் குழுக்குழுக்களாகவும் பிரிந்து நிற்கின்றோம்.
நமது ஈமானில் உள்ள பலவீனமே நம்மை சமூகத்தில் இருந்து தூரமாக்கி உள்ளது.இஸ்லாமிய சமூககட்டமைப்பு மிகவும் பலமாகவும் நெறிப்படுத்தல்களுடன்கூடிய ஒன்றாகும்.இன்று இஸ்லாமிய மற்றும் அரசியல் கொள்கை முரண்பாடுகள் நம்மை அறியாமலே நம்மை தனிமைப்படுத்தி உள்ளது.இதன் மூலம் நாம் வாழ்கின்ற சமூகத்தில் எதுவித உணர்வுகளுமற்ற ஐடமாக வாழ்கிறோம்.**சமூகம் **என்ற பதத்திற்கும் நமக்கும் தொடர்புகளற்ற இடைவெளியில் நிற்கிறோம்.
இந்த நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.வெறுமனை சமூகத்தில் பெயர்தாங்கியாக வாழ்கின்ற தனிமனித செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வழிநடாத்தப்பட வேண்டும்.இதன் மூலமே சமூகத்தில் உண்மையான தனிமனித அந்தஸ்து அர்த்தப்படும்.இதற்கான வேளைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.அதன்மூலம் தான் வாழ்கின்ற சமூகத்தில் தனிமனித பொறுப்புடமை கலாச்சாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
நாம் வாழ்கின்ற சமூகத்தில் நமக்கான தேவைகளையும் பொறுப்புகளையும் சமூகமயமாக்குவோம்.