பிரதான செய்திகள்

சமூகத்திற்காக பேசுகின்ற போது சிங்கள பேஸ்புக் பக்கத்தில் பிரபாகரனை போல் எனக்கு விமர்சனம்

எமது சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி பேசும்போது அது சிங்கள மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கப்படுவதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் எம்.எம் ராஸிக் எழுதிய நூலின் அறிமுக விழா நேற்றுமுன் தினம் கொழும்பில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிங்கள மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கப்படுவதால் சிங்கள இளைஞர்கள் என்னை கொலை செய்யும் அளவுக்கு உணர்வுகளால் தூண்டி விடப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் சிங்கள மக்கள் பிரபாகரனை எந்த நிலையில் பார்த்தார்களோ! அதே நிலையில் தான் இன்று என்னையும் பார்க்கிறார்கள்.

அதுமட்டுமன்றி Protect Wilpaththu என்ற முகப்புத்தகத்தை ஜனாதிபதியுனுடைய செயலகத்தில் இருந்தே இயக்குகின்றார்கள்.

அதனை நான் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியும் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மன்னார் வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள்.!

Maash

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் facebooK

wpengine

சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும்.

Maash