பிரதான செய்திகள்

சமுர்த்தி வேலைத்திட்டம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்! பிரதமர் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழில் பல பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், அந்த பிரதேசம்க்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02ஆம் திகதி சமுர்த்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மாநகர சபை வளாகம் மற்றும் மணியம்தோட்டப் பகுதி உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் வருகை முன்னிட்டு, விசேட பாதுகாப்புக்கள் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

wpengine

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்! -சுஐப்.எம்.காசிம்-

Editor

செப்டெம்பர் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல்! 95% பணி நிறைவு

wpengine