மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப்பிரிவின் மாங்கேணி சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற 2 மில்லியன் மோசடி நிதிக்குற்றவிசாரணை பிரிவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றதாக கருதப்படும் 2 மில்லியன் நிதி மோசடி. தொடர்பாக நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டடு விசாரணை செய்யப்பட்டு வருகிகின்றார்.
மாவட்ட செயலாளரால் இடைநிறுத்தப்பட்ட வங்கியின் உதவி முகாமையாளர் ஒருவரையே பொலிசார் கடந்த 05.06.2017 பிற்பகல் 04.45 மணியளவில் கைது செய்து 06.06.2017 அன்று வாழைச்சேனை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டு 14 நாள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற 2 மில்லியன் மோசடி தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டபோதும் பல்வேறு தரப்பினர் அதற்கு தடையினை ஏற்படுத்தி பல அழுத்தங்களை பிரயோகித்து விசாரணையினை நீர்த்துப்போக செய்யும் வகையில் மாவட்டத்தின் பல அதிகாரிகள் செயல்பட்ட நிலையில் கொழும்பு திணைக்கள மட்டத்தில் தனியான விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து
விசாரணை எனும் போர்வையில் குற்றச்சாட்டுக்களை நீர்த்துப்போகும் வகையில் செயல்பட்ட மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு முகாமையாளர் ஒருவர் அப்பதவியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி புலனாய்வு அலகும் 31.05.2017 அன்றுடன் கலைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .
தற்போது நிதி மோசடிக் குற்றவிசாரண பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையினால் இத்தரப்புக்கள் அச்சத்தில் உள்ளனர் அத்துடன் மோசடியுடன் தொடர்புடைய பலர் இதில் சிக்க நேரிடும் என்பதால் மோசடியுடன் தொடர்புடைய பலர் பதட்டமான நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மோசடி செய்யப்பட்ட 2 மில்லியன் பணத்தில் சுமார் 1 மில்லியன் பணம் கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரின் சகோதரனும் ஓட்டமாவடி பிரபல முஸ்லிம் அரசியல் வாதியின் வாகரை பிரதேச இணப்பாளராக செயல்படும் நபரினால் மீளவும் வங்கியில் வைப்பு செய்ய பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது மீதமான 1 மில்லியன் பணம் இதுவரை 17 மாதங்கள் கடந்தும் இதுவரை வைப்புச்செய்யப்படவில்லை.
வங்கி சங்க நெறிப்படுத்தல் கையேட்டு இல 12. உப பிரிவு 4.8 இற்கு அமைவாக 40மூ தண்டனை வட்டியுடன் அறவிடல் வேண்டும் அவ்வாறெனில் (1000000÷100×40×17)
6.8 மில்லியன் தண்டனை வட்டியுடன் 7.8 மில்லியன் மொத்தமாக செலுத்துதல் வேண்டும்.