கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் சமுர்த்தியில் மோசடி இடம்பெற்றதாகவும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் தெரிவித்த இன்று சமுர்த்தி பயனாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிளிநொச்சி சமுர்த்தி வங்கி முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் போராட்டத்தில் குறித்த நபர் ஈடுபட்டார்.
சமுர்த்தி பணம் பெற வந்த எனக்கு வங்கி வளாகத்தில் வைத்தே சேமிப்பு பணமாக 3500 ரூபா வைப்பிலிட வேண்டும் என தெரிவித்ததாகவும், மறுத்தமைக்கு தனது புத்தகத்தில் சிவப்பு பேனாவால் வெட்டி அனுப்பியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
வங்கி வளாகத்தில் குறித்த வங்கியாளர்கள் குறிப்பிட்டது போன்று பணம் அறவிடப்பட்டு வந்தது.
தனிநபர் சேமிப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்படாத நிலையில், குழுக்களின் தலைவர்கள் தாம் தீர்மானித்த தொகைக்கு அவர்களை வற்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் சமுர்த்தி வங்கிக்கும், உத்தியோகத்தர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தபோதிலும், வங்கி வளாகத்தில் குறித்த சேமிப்பு நடவடிக்கை இடம்பெற்றமை தொடர்பில் பொறுப்பு கூற மறுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் உயரதிகாரிகள் சமுர்த்தி பயனாளிகளில் அடி மட்டம் வரை சென்று ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.