பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சமுர்த்தி முகாமையாளர்களுக்கு செயலமர்வு! வங்கி முகாமையாளர்கள் அனாகரிகமான செயற்பாடு

வன்னி மாவட்டம் மற்றும், கிளிநொச்சியை சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர் அலுவலர்களுக்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சமுர்த்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் மூலம் மக்களிற்கு பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் விஸ்தரித்து அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி தலைமைபீடத்தில் இருந்து வருகை தந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டஅரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ச.சந்திரகுமார் என பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார்,வவுனியாவில் மாவட்டங்களில் கடமையாற்றும் அதிகமான வங்கி முகாமையாளர்கள் நிதி மோசடிகளிலும்,வங்கிக்கு வருகை தரும் பயனாளிகளிடம் மிகவும் கீழ்தரமான முறையில் கடந்த காலங்களில் நடந்துகொண்டுள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.

இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்மென பயனாளிகள் கோரிக்கையினையும் விடுத்துள்ளார்கள்.

Related posts

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor

முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் கைவைக்கும் ரணில்

wpengine

காலம் கணிந்துவிட்டது சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் !

wpengine