Breaking
Tue. Nov 26th, 2024

சமுர்த்தி,சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டங்களில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக முசலி இருந்து வருகின்ற போது  மாதிரி கிராம வேலைத்திட்டத்தில் தொடராக இப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார். 

மன்னார் மாவட்டத்திற்கு கடந்த 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமுர்த்தி கிடைக்க பெற்றும் சமுர்த்தி தொடர்பான நிதிகள் வரும் வேலைத்திட்டங்களில் முசலி பிரதேசம் அபிவிருத்தி பற்றி மாவட்ட மட்டத்தில் யாரும் முன்மொழிவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கு இதுவரைக்கும் மாதிரி கிராம வேலைத்திட்டங்கள் முன்று முறை மாவட்ட செயலகத்திற்கு கிடைக்க பெற்றும் முன்பு இருந்த உதவி சமுர்த்தி ஆணையாளர் சசீதரன் கூட முசலிக்கு வழங்காமல் மாந்தைக்கும், அது போது தற்போது உதவி சமுர்த்தி ஆணையாளர் கடமையாற்றும் பபாகரன் கூட இரண்டு தடவைகள் மடுவுக்கும், ஏனைய பிரதேச செயலகங்களுக்கு வழங்கி வருகின்றார். இது போல விஷேட நிதி வேலைத்திட்டங்கள்  வருகின்ற போது அதனை கூட தமிழ் கிராமங்களுக்கு வழங்கி வருகின்ற விடயத்தை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

இது போன்று இந்த முறை முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் வாழும் கிராமத்திற்கு மாதிரி வேலைத்திட்டத்திற்கான அனைத்து வேலைகளும்,பயனாளிகள் தெரிவும் முடிவடைந்த வேலையில் சமுர்த்தி உதவி ஆணையாளர் பபாகரன் அதனை மாற்றி மடுவில் உள்ள ஏனைய தமிழ் கிராமங்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
எனவும் அறியமுடிகின்றது.

அத்துடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தினம் கொழும்பில் இருந்து அதிகாரிகள் முசலி பிரதேசத்தை கூட பார்வையிடுவதற்கு வந்த வேலை அவர்களை கூட தடுத்து நிறுத்தி உள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இது போன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் புகைப்படம் எடுத்துகொண்ட போது அவர்களுடைய அபாயாவினை கலற்றிவிட்டு அவர்களுக்கு புடவைகளை கட்டி அழகு பார்த்த ஒரு உயர் அதிகாரி எனவும் இனம் காணமுடிகின்றது.

முசலி பிரதேசம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வதன் காரணமாக மாவட்ட செயலக அபிவிருத்தி வேலைத்திட்டத்திலும்,விஷேட நிதி வேலைத்திட்டதிலும் இந்த பிரதேசம் புறக்கணிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *