பிரதான செய்திகள்

சமுர்த்தி பெற்றோரின் உதவிகள் வெட்டப்படுமாயின்! பிரதேச செயலாளரிடம் முறையிடுங்கள் -மாவை

சமுர்த்தி உதவிகளை பொருத்தமானவர்கள் பெற்றுக்கொள்வதற்கான முயற்சி எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும்,

சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பெறுபவர்களின் எண்ணிக்கை கூட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் தாங்கள் பெறும் சமுர்த்தி உதவிகள் மற்றும் தங்கள் பெயர்கள் வெட்டப்படுகின்றன என முறைப்பாடுகள் செய்கின்றனர்.

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முழுமையாக மீள்குடியேற்றங்கள் இடம் பெறவில்லை. உழைக்கும் தகுதியுள்ளவர்களுக்கு உழைக்கும் வாய்ப்புக்கள் உருவாகவில்லை.

அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு வாழ்வாதாரம் இல்லை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்திச் செல்லமுடியாமலுள்ளோர் தொகை அதிகரித்துள்ளது.

அத்துடன் சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுந்தோரைத் தெரிவதற்கு வகுத்த வரைவிலக்கணம், விதிமுறைகள் வகுக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்து விட்டன.

நிகழ்காலத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் சமுர்த்தி உதவி பெறத் தகுதியுடையோர் பட்டியல் தயாரிக்கும் விதிமுறை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இதுவரை காலமும் சமுர்த்தி உதவி பெற்றோரின் உதவிகள் வெட்டப்படுமாயின் அவர்கள், தாங்கள் வசிக்கின்ற பிரதேச செயலாளர்களிடம் முறையிடுங்கள்.

இதுவரையும் சமுர்த்தி உதவி பெறத் தகுந்தோரும் உரிய சமுர்த்திப் பட்டியலில் பதிவு செய்வதில் தவறுகள் நேர்ந்திருந்தால் அது பற்றியும் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம்.

இவ் விடயங்களை எதிர்வரும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க முடியும்.

இந்த வாரத்தில் பாராளுமன்றம் நடைபெறும் காலத்தில் சமுர்த்தி அமைச்சரிடம் பேசி சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுந்தவர்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு உதவும் பொருட்டுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாட்டை பற்றி பிழையாக பேசி தெரிகின்றார்கள்

wpengine

புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம்

wpengine

புதிதாக 20ரூபா நாணயம்! 70வது ஆண்டு நிறைவு

wpengine