“சாஹன பியவர சாஹ அருணலு” என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சமுர்த்தி பயனாளிகள் சுமார் 20 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.
இதற்காக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம ஆர்.பி.பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள தொடர் வேலைத்திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி பயனாளிகளுக்காக ரூபா பத்தாயிரம் முற்பண கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சமீபத்தில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தலா ரூபா 5000 ரூபா வீதம் இரண்டு கட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதுடன், முதல் கட்டத்தின் பத்தாயிரம் மில்லியன் ரூபா பயனாளிகளுக்காக செலவிடப்படுகிறது.
இரண்டாம் கட்டம் பயனாளி சமூகத்தின் தேவைக்கு அமைவாக ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

