பிரதான செய்திகள்

சமுர்த்தி கொடுப்பனவை மீளப் பெறும் விவகாரம்: எஸ்.பிக்கு எதிராக மனு

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செழிப்பான இல்லம் (இசுருமத் நிவஹனக்) வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு வீடுகளைக் கட்டுவதற்காக வழங்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை, சமுர்த்தி பயனாளிகளிடம் இருந்து மீனப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சாமர மத்துமகலுகே குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வவுனியா நடமாடும் சேவையில் கலந்துகொண்ட ஜனாதிபதி,பிரதமர்,றிஷாட்

wpengine

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்

wpengine

போரை முடிவிற்கு கொண்டு வந்த தனக்கு வரியை குறைப்பது பெரிய விடயம் கிடையாது மஹிந்த

wpengine