பிரதான செய்திகள்

சமுக சேவைப் பணியில் இணைந்து கொள்ள அழைப்பு

(அஷ்ரப் ஏ சமத்)
THIHARIYA TRUST CENTRE (TTC) நிறுவனம் பொதுமக்களின் சில தேவைகளை இனங்கண்டு அவைகளை நிறைவு செய்ய தேவைப்படும் நிதியை திரட்ட திட்டமொன்றை வகுத்து கடந்த ஒரு வருடமாக செயற்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக களுத்தறை, கொழும்பு, கம்பஹ, கேகாலை, குருணாகல், புத்தளம், கண்டி மாவட்டங்களிலுள்ள ஏனைய சமூக சேவை அமைப்புக்களுடன் இணைந்து கீழ் காணும் சமூகத்தின் தேவைகளை  இலவசமாக நிறைவு செய்ய TTC தீர்மானித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிதியை TTC நிறுவனம் ஒதுக்கீடு செய்யும்.

• பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா, அரபு மத்ரஸா, பகுதி நேர வகுப்புக்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் கல்விச் செலவுக்காக கல்வி சகாய நிதி வழங்கல்.

• சுய தொழில் ஒன்றை அமைக்க நிதி வழங்கல்.

• தனி நபரால் ஈடு செய்யமுடியாத செலவுகளை ஏற்படுத்தும் நோய்க்குட்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கல்.

• கிராமங்களிலுள்ள சமூக சேவை அமைப்புக்களினூடாக நூலகமொன்றை அமைத்துக்கொடுப்பதுடன், நூலக பராமரிப்புக்காக மாதாந்தம் நிதி ஒதுக்கீடு செய்தல்.

• வாழ்நாள் பூராகவும் நோய்க்காக மருந்து பாவிக்கும் நோயாளிகளுக்கு நாளாந்த மருந்து செலவுக்காக நிதி உதவி வழங்கல்.

• வீடற்றவர்களுக்கு வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்தல்.

• தனியார் அரச கல்வி நிறுவனங்களுக்கு மாதாந்தம் நன்கொடை வழங்கல்

• வட்டியில்லாக் கடன் அமைப்பொன்றை ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பித்து அதற்கு மாதாந்தம் நிதி உதவி வழங்கல்.

TTC நடைமுறைப்படுத்தவுள்ள சமூகப் பணிகளை TTC உடன் இணைந்து தமது கிராமத்தில் செயல்படுத்த விரும்பும், சமூக சேவை அமைப்புக்கள், தஃவா அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பழைய மாணவர்கள் சங்கங்கள் என்பன 077 6750412 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Dr. M.S.M. Mansoor,

Director,
TTC,
Thihariya.

Related posts

புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட், டெனீஸ்வரன்

wpengine

நாட்டில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு!

Editor

ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது’ -அஷாத் சாலி

wpengine