பிரதான செய்திகள்

சமுகத்தை பற்றி சிந்திக்காமல்!புத்தகம் எழுதும் ரவூப் ஹக்கீம்

அண்மையில் நடந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பில் அந்த 51 நாள் என்னும் புத்தகத்தை இப்பொழுது எழுதினால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அண்மைய அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறியுள்ள அவர்,
நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

இப்பொழுது அப்புத்தகத்தை எழுதினால், எங்களது தரப்பிலும் எதிர்தரப்பிலும் பலர் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படும்.

கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொதுமக்களின் அபிலாசைகளை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் தயாரில்லை.

தற்போது மீண்டும் வாய்த்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை பாரியளவில் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முல்லைதீவில் சட்டவிரோத மாடு கடத்தல்! மஸ்தான் முன்னிலையில் சி.சிவமோகன் குற்றசாட்டு

wpengine

26 ஒசுசல அரச மருந்தகங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபா நஷ்டம்!

Editor

சமூகத்திற்காக பதவியினை துறந்து போராடுவேன் அமைச்சர் றிஷாட்

wpengine