அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

சமத்துவத்தின் அடிப்படையில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் .

நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகியுள்ளது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை புத்தாக்க மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
கடந்த காலங்களை சிந்தித்தே நாம் எதிர்காலம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.எமது பழைய தலைவர்கள் தொடர்பில் நன்கு தெரியும்.எமது நாட்டின் கடந்த காலம் தொடர்பில் நாம் பெருமையுடன் பேசுகிறோம். நாம் எதிர்காலம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். அது தொடர்பான கருத்தாடல்களில் புத்தாக்கங்கள் அவசியமாகும். குறிப்பாக புத்தாக்கம் தொடர்பில் சிந்திக்கும் போது அதில் ஆபத்துக்களும் இருக்கலாம்.அனைவரும் புத்தாக்கங்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம்.அது இலகுவான விடயமல்ல. புத்தாக்கங்கள் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்.அதனை நாம் கட்டயாமாக செய்ய வேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை மாத்திரம் சிந்தித்து புத்தாக்கங்களை மேற்கொள்ள முடியாது.அதில் புதிய சிந்தனைகள் தாக்கம் செலுத்துகின்றன.நிச்சயமாக நாம் அதனை செய்ய வேண்டும்.

காலம் கடந்த சட்டங்களும் அதில் இருக்கின்றன. இந்த காலப்பகுதியில் புத்தாக்கம், அபிவிருத்தி என்ற கொள்கையுடன் முட்டி மோத வேண்டும். அந்த மோதலின் ஒருபகுதியே சமூக சமத்துவமாகும். அந்த சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை உருவாக்க முடியாமல் போயுள்ளமை எமக்கு கிடைத்த சுதந்திரத்தை ஜனநாயக முறையில் சரியாக பயன்படுத்தவில்லை என்பதை உணர்த்துகிறது.

இதன் ஊடாக சலுகைகளை பெற்றுக் கொண்ட பிரப்புக்கள் அரசில் பாகுபாடுகளை உருவாக்கினார்கள்.இதன் காரணமாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த அரசியல் கலாசாரம் உருவாகியது.இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். அது நாம் எதிர்பார்த்த மாற்றமாக நாம் நினைக்கிறோம் என்றார்

Related posts

கஞ்சா பொதி கடத்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பு அரசியல்வாதி

wpengine

சட்ட விரோத மண் அகழ்வு! மட்டக்களப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

wpengine