Breaking
Sun. Nov 24th, 2024

காய்கறி நுகர்வு சுமார் 40% அதிகரித்துள்ளது. காய்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ளதாலும், சில்லறை சந்தையில் விலை ஸ்திரமாக உள்ளதால் நுகர்வு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிகின்றனர்

சில வருடங்களுக்கு பின்னர் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

பெறப்பட்ட அனைத்து மரக்கறிகளின் விலையும் ஒரு கிலோ இருநூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் நேற்று சுமார் 07 இலட்சம் கிலோ மரக்கறிகள் கிடைத்துள்ளதாகவும் தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் தொழிற்சங்க செயலாளர் ஐ.ஜி. விஜயானந்தா தெரிவித்துள்ளார்.

1 கிலோ பச்சை மிளகாய் 180 ரூபாவும், கத்தரிக்காய் 200 ரூபாயும், கேரட் மற்றும் வெண்டைக்காய் 140 ரூபாயும், பீன்ஸ் 150 ரூபாயும், தக்காளி 100 ரூபாயும், பூசணிக்காய் 45 ரூபாயும் அதிகபட்ச மொத்த விற்பனை விலையாகும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

A B

By A B

Related Post