பிரதான செய்திகள்

சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் மண்ணை தோண்டும் விஷேட பிரிவு

வவுனியா – பாரதிபுரத்தில் வீட்டுக்காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று நேேேற்று  காலை பத்து மணியளவில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், குறித்த வீட்டு காணியிலிருந்து எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோண்டும் பணி நடைபெற்ற போது அப்பகுதியைச் சுற்றி
விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, கிராம சேவையாளர் முன்னிலையில் வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வாளர்கள் ஆகியோரால் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தோண்டப்பட்ட பகுதியில் தகர கொள்கலன் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்பாவனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்

wpengine

நெடுந்தீவு வைத்தியசாலைக்கான தீர்வு கிடைக்கும்

wpengine

கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

Maash