பிரதான செய்திகள்

சந்திரிக்காவை சந்தித்த ரவி கருணாநாயக்க

அபி­வி­ருத்­தியை நோக்­க­மாக கொண்ட வரவு – செலவு திட்­ட­மொன்றை நாட்டு மக்கள் எதிர்­வரும் 10 ஆம் திகதி எதிர்­பார்க்க முடி­யு­மென முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை கொழும்பில் நேற்று சந்­தித்து உரை­யா­டிய பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்தச் சந்­திப்பின் போது தேசிய அர­சாங்­கத்தின் இரண்­டா­வது வரவு செலவு திட்டம், அதன் முக்­கிய அம்­சங்கள் மற்றும் நாட்டை எவ்­வாறு அபி­வி­ருத்திப் பாதையில் இட்­டுச்­செல்­வது போன்ற விட­யங்கள் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்­கு­முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, கருத்து வெளியிடு­கையில்;

நாட்டு மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான புதிய வரவு – செலவு திட்­ட­மொன்றை கொண்டு வரு­வது தொடர்பில் நிதி அமைச்­ச­ருடன் இன்று (நேற்று) பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. இம்­முறை சிறந்­த­தொரு வரவு – செலவு திட்­டத்தை எதிர்­பார்க்க முடியும் என நம்­பு­கின்றோம்.

அந்த வரவு – செலவு திட்­ட­மா­னது சக­லரும் மகிழ்ச்­சி­ய­டையக் கூடிய விதத்தில் அமைந்­தி­ருக்கும். குறிப்­பாக உள்­நாட்டில் சிறந்­த­தொரு அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க வழி­வ­குக்கும் வரவு – செலவு திட்­ட­மாக அமைய வேண்டும். இது தொடர்­பி­லேயே நிதி அமைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. அதனால் எதிர்­வரும் 10 ஆம்தி கதி சிறந்­த­தொரு வரவு–செலவு திட்­டத்தை மக்கள் எதிர்­பார்க்க முடியும் என்றார்.

ரவி­ க­ரு­ணா­நா­யக்க பேச்­சு­வார்த்­தையின் நிறைவில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில்,

முத­லீ­டு­களை அதி­க­ரிப்­பது மற்றும் நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான வரவு – செலவு திட்­ட­மொன்றை முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின் றோம். இது தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வுடன் நான் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். தொடர்ச்­சி­யாக அனைத்து தரப்பினருடனும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதற்கமையவே தற்போது முன்னாள் ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம் என்றார்.

Related posts

இன முறுகளை ஏற்படுத்தும் நோக்குடன் சில குழுக்கள்! பெருநாள் வாழ்த்து செய்தியில் அமீர் அலி

wpengine

மன்னார் ஆயருக்கும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் சந்திப்பு

wpengine

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்க றிஷாட் கோரிக்கை

wpengine