தலைவரின் பாசறையில்
மென்று தின்றவர்கள்
சுயநலப் போக்கோடுதான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிப்பினைக்காய்
ஜெமிலும், இஸ்மாயிலும் இருக்கிறார்கள்.
அவர்களைப் போன்றோர்தான்
சூரியன் உதயமாவதற்கு முன்னே இருட்டில் திருட்டு வேலைகளைச் செய்து கொண்டு செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.
அதே பிரசவத்தில் பிறந்த பிம்பங்கள் இன்னும் கட்சிக்குள் ஊசலாடித்திரிவதை தலைவர் அறியாமலுமில்லை, புரியாமலுமில்லை.
சரவணப்பெருமான் சண்முகமெல்லாம் தலைவரின் நேயத்தை விளங்காது கட்சிக்குள் இருந்து மந்திரத்தாலும், தந்திரத்தாலும் முதலுதவிகளைப் பெற்று நழுவிச் செல்லும் விலாங்கு மீனாக இவர்களைக் காண முடிகிறது.
எத்தனையோ ஜெமில்களையும்
எத்தனையோ இஸ்மாயில்களையும் இந்த பூமித்தாய், தன் வயிற்றில் சுமந்து கொண்டு, அவர்களின் எத்தனை அநியாயங்களைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த நம்பிக்கைக்குத் துரோகம் பூமி அதிர்வை உணர்வது போலும், அது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்கும் ஒப்பாகும்.
எனவே,
“பொத்தி வளர்த்த மகன்
போன இடம் தெரியாம
பொறுக்கொண்ணாத் துயரமாய்
பொழிந்து தள்ளும் கண்ணீர்த்
தாய் போல
களங்கமற்ற நிலை கொண்டு நம் சமூகமென்று எண்ணி
பல சோதனைகள் சந்தித்த
எம் தலைவர்
ரிஷாத் பதியுதீனின் பொன்னான சிந்தனைகள் மண்ணாகிப் போகாமல்
மானமுள்ள மனிதனாய் மகத்துவமாய்க் காத்துடுவோம்”.
என்ற
தலைவரின் கொள்கைப்பாட்டை மனதில் நிறுத்திக் கொண்டு போராளியாகிய நாம் நமது யாத்திரையை சரியாகச் சத்தியத்தோடு தலைவருக்காகவும், கட்சிக்காகவும் செய்துடுவோம்.
அன்புடன்
கவிஞர் கால்தீன்.