பாவனைக்கு உதவாத பூச்சிகளுடனான ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சதொச பணிப்பாளர் சபைக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் இன்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சதொச களஞ்சிய சாலையில் இருந்து அரசாங்க ஆய்வாளர்களால் கைப்பற்றப்பட்ட
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான குறித்த அரிசி தொகையில் பொன்னி சம்பா 44 ஆயிரம்
கிலோ கிராம் காணப்பட்டுள்ளது.
குறித்த அரிசி தொகையினை விலங்குகளுக்கு உணவாக அளிக்குமாறு அனுராதபுரம் மேலதிக
நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நதீகா டீ.பியரட்ன இன்று உத்தரவிட்டுள்ளனர்.