பிரதான செய்திகள்

சதொசவின் மற்றுமொரு பரிமாணம்!அமைச்சர் றிஷாட்டின் ஆலோசனைக்கு இன்று 50சதொச

நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றுதலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைக்கேற்ப இவ்வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றது.
50 சதொச கிளைகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கின்றமை விஷேட அம்சமாகும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொசவைப் பொறுப்பேற்றதன் பின்னர் நட்டத்தில் இயங்கி வந்த சதொச நிறுவனம் இலாபகராமான நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் தனியார் சுப்பர் மார்க்கெட்டுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் சதொச நிறுவனம் நாடளாவிய ரீதியில் நியாயமான விலையிலும் தட்டுப்பாடற்ற வகையிலும் பொருட்களை விநியோகித்து வருகின்றது.

இந்த வருட இறுதிக்குள் சதொச கிளைகள் அனைத்தையும் கணணி மயப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பெரும்பாலான சதொச நிறுவனங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் சதொச நிறுவனத்தை மேலும் வினைத்திறன் உள்ள நிறுவனமாக மாற்றி சந்தையின் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையிலான செயற்பாடுகள் நடைபெற்றுவருதாக நிறுவனத்தின் தலைவர் டி எம் கே பி தென்னகோன் தெரிவித்தார்.

இற்றைவரையில் நாடாளாவிய ரீதியில் 325 லங்கா சதொச நிறுவனங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறல்! 8 வருட தடை

wpengine

பெறும்பான்மை,சிறுபான்மை மக்களின் ஆதரவில் உருவான நல்லாட்சியினை கவிழ்க்க முடியாது றிஷாட்

wpengine

கதிகலங்கி நிற்கும் செங்காம மக்களின் பரிதாபங்கண்டு கண்கலங்கிய றிசாத்

wpengine