பிரதான செய்திகள்

சட்ட விரோத மண் அகழ்வு! மட்டக்களப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் இன்று (08)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நீர்பாசன திணைக்களத்தினால் மாவடியோடை பாலம் மற்றும் அதன் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டுவந்த பணிகள் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலையீடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த மாவடியோடைப்பாலம் மழைகாலத்திற்கு முன்பாக பூர்த்திசெய்யப்படாவிட்டால் விவசாயிகள் பாரிய அழிவினை எதிர்நோக்கும் நிலையேற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது பிரச்சினைகள் தொடர்பில் அவரை தெளிபடுத்தமுடியாத நிலையிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாய்ச்சல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை முற்றாக நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வேளையில் அவற்றினை குழப்பும் வகையில் சில மண் கொள்ளையர்கள் இவ்வாறான விவசாயிகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்

Related posts

ஜனாசா நல்லடக்கமும் சில யதார்த்தங்களும்

wpengine

சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்

wpengine

உப்பு நிறுவனத்திற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கிய கோட்டாபய

wpengine