Breaking
Sun. Nov 24th, 2024

(தகவல் தமிழ்வின் இணையதளம்)

மன்னார் – முருங்கன் பகுதியில் உள்ள மல்மத்து ஆற்றின் ஓரங்களில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட முசலி பிரதேச சபையின் முன்னால் பிரதி தலைவர் உட்பட ஐவரை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வன்னி மாவட்ட பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஐவரையும் இன்று கைது செய்துள்ளதாக முருங்கன் பொலிஸார் கூறியுள்ளனர்.

சட்டவிரோத அகழ்விற்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் மற்றும் பல்வேறு உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீண்டகாலமாக சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த பகுதி சூழல் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும்  விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் முகம்மது  பயீரூஸ் பொலிஸாருக்கு அச்சுறுத்தலை வழங்கி, பொலிஸாரின் கடமைகளை தடுத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரை இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருப்பதாகவும் முருங்கன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/106979

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *