பிரதான செய்திகள்

சட்டவிரோத மணல் கொள்ளை! 125000ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 125000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி பொலிஸர் கைது செய்துள்ளனர்.

குறித்த டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலைபடுத்திய நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ், ஏழு நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பாரம்பரியமான வட, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும்! ஹக்கீமிடம் சம்பந்தன் கோரிக்கை

wpengine

ராஜபக்ஷக்களை ஆதரிப்பார்களா தமிழ் தேசியவாதிகள்?

Editor

ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீண்பழி சுமத்தப்படுகின்றது! கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டுக்கள்

wpengine