செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோத சொத்துக்கள் அரசுடமையாக்கும் திட்டம் விரைவில் . . !

டந்த கால அரசாங்கங்களில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றில்  சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை அமைச்சர் ரிஷாட்

wpengine

சம்மாந்துறை IIFAS அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

wpengine

டீசலை சோடா என அருந்திய 1 ½ வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

Maash