பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த அரச ஊழியர்! விசாரணை

சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்து திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய அரச அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் இரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.


அதற்கமைய குற்ற விசாரணை பொலிஸார், மோசடியான சுங்க பிரிவு அதிகாரிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் அவர்களின் கணக்குகளின் விபரங்கள் பெறுவதற்கு நீதிமன்றத்தில் பீ அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய சம்பளத்தை விடவும் எதிர்பார்க்க முடியாதளவு பெறுமதி வீடுகள், சொத்துக்களை வைத்திருக்கும் ஊழல் மிக்க அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தற்போது குற்ற விசாரணை திணைக்களம் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


பொது மக்களின் பணத்தையும் சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் அரச நிறுவனங்கள் ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் ஆராய அரச புலனாய்வு பிரிவுகள், இராணுவ புலனாய்வு உட்பட துப்பு வழங்கும் விசேட புலனாய்வு பிரிவுகள் இதற்காக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

Related posts

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும்.மக்கள் வாழ வேண்டும்- சஜித்

wpengine

பஸ்ஸில் சத்தமான பாடல் ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு

wpengine

முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் 100 ஆவது பிறந்ததினம்

wpengine