பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள கைது!! நாடு கடத்த நடவடிக்கை..!!!!!

சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, அவை காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள், இணையம் மூலமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடர் மதிப்பீட்டுப் பிரிவு சார்ந்த அதிகாரிகள், தங்கள் வசமுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், இந்த இந்திய பிரஜைகள் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 – 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக வெலிசரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

மாவனல்லை இரு புத்தர் சிலைகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

wpengine

சஜித்துடன் இணைவும் சந்திரிக்கா,குமார வெல்கம

wpengine

ஊத்துச்சேனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிய அமீர் அலி

wpengine