பிரதான செய்திகள்

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

“ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் இருக்கவேண்டும்.

இதுவே தற்போதைய நிலைமையில் நல்லது.”
இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


“சட்டத்தை மதித்து முப்படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இக்கால கட்டத்தில் வீணான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.


கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வதைத் தடுப்பதற்காக அரசும், சுகாதார அமைச்சும், முப்படைகளும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Related posts

அமைச்சர் றிஷாத் மறிச்சுக்கட்டி போராட்டத்தை சுயநலத்துக்காக கை விட்டாரா?

wpengine

மு.கா. மாகாண சபை உறுப்பினர் றயீஸ் ராஜினாமா

wpengine

கிழக்கு மாகாண முஸ்லிம் அளுநர் நியமனம்! இனவாதம் பேசும் அரியநேத்திரன்

wpengine