மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம், இன்று வெள்ளிக்கிழமை (19) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, உத்தியோகப்பூர்வ இல்லத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்ஸி டி மேல், சர்வமதத் தலைவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவால் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேராவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.