Breaking
Thu. Nov 21st, 2024

நிர்ணயித்த வகையில் கடந்த மாா்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி மற்றும் பெஃப்ரல் அமைப்பும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரினால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசா்கள் ஆயத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான பாிசீலனை தொடர்ந்தும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகிறது.

A B

By A B

Related Post