Breaking
Sat. Nov 23rd, 2024
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஒரு நாட்டில் சட்ட ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமாகவிருந்தால், சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை என்பன சுதந்திரமாக இயங்க வேண்டும். இதனை உரிமையின் அடிப்படையில் நோக்குவோமாகவிருந்தால் ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும் மேம்படச் செய்கின்றது,  அதே போல் ஓர் உரிமையை மறுப்பது, பிற உரிமைகளை எதிர் மறையாக பாதிக்கின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மனித உரிமை பாதுகாப்பு குழுக் கூட்டம் அண்மையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.25cc3e8d-a76f-4788-982d-7a1e5e5e8353
மேலும்; உரையாற்றுகையில்,
எவருக்கும்  எங்கேயும் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் அடிப்படை உரிமை மீறல்களை புலனாய்வு செய்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரமுள்ளது. இது அரசாங்கத்தின் நிர்வாக நிறைவேற்றுத்துறையினர் மீறுகின்ற போது நடவடிக்கை எடு;க்க முடியும்.
சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது.18a78157-e786-4298-8311-18e43482eec7
சட்டம்  எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் முறைமை என்பதால் எவரும் மட்டுப்படுத்த முடியாது.
சட்டத்தை தெரிந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தும் அவற்றை பொது மக்கள் அறிந்து கொள்வதில் சிரமங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகிறது.  அத்துடன் போதியளவு அக்கறை காட்டுவதில்லை.
சட்டமானது சமுக மதிப்புகளையும், சமுகத்தில் வாழ்கின்ற மக்களின் நம்பி;க்கைகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றது.
சமூக நன்மைகள் மாற்றமடைவது போல் சட்டமும் மாற்றமடையும். காலத்தின் தேவை கருதி புதிய சட்ட திட்டங்கள் வருவது வரவேற்கத்தக்கது. இது மக்களின் நலன்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட வேண்டும்.
சட்டமானது அனைவருக்கும் சமனான வகையில் ஏற்புடையது, ஆனால் எவருக்கும் விதிவிலக்கு வழங்கப்படக்கூடாது. அவ்வாறு இருந்தால் மாத்திரமே சட்டத்தின் குறிக்கோளாகிய நீதியை அடைதல்  என்ற விடயத்தில் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படும். பொதுவாக சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் ஒரு முறைமை என்பதால் மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவினர் அனைத்து சட்டங்களையும் அறிந்து கொள்வதுடன் பிரதேசத்தில் நடைபெறும் அடிப்படை உரிமை மீறலுக்காக குரல் கொடு;க்க வேண்டும் என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது அடிப்படை உரிமை பற்றி திருமதி. இளங்கேஸ்வரி; விளக்கமளித்ததுடன் மாவட்ட மட்டத்திலுள்ள பெண்களின் பிரச்சினைகள், சிறுவர்களி;ன் பிரச்சினைகள், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பொலிஸ் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் குழுக் கலந்துரையாடல் இடம்பெற்று அறிக்கையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *