பிரதான செய்திகள்

சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.


வவுனியாவில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் முத்துராசா தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது இன்று காலை காலமானார்

wpengine

அரச கட்டிடங்கள், மதஸ்தலங்களில் சோலர் நிறுவுவது குறித்து வெளியான தகவல்!

Editor

WhatsApp,Facebook க்கு புதிய கொள்கைகள்?

wpengine