பிரதான செய்திகள்

சஜித் தலைமையிலான குழு இன்று விஷேட சந்திப்பு!ஜனாதிபதி முறைமையை நீக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

Related posts

தெஹிவளையில் கவ்டானா வீதியில் இன்று 4 பேரின் சடலங்கள் அவைபற்றிய (படங்கள்)

wpengine

மன்னார் பிரதேச செயலகத்தினால் விடுத்துள்ள கோரிக்கை! கலாச்சார விழா

wpengine

ரணிலின் பொறியில் சிக்கிய எலி

wpengine