பிரதான செய்திகள்

சஜித் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலி உருவாகும்

சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.


எனினும், நாங்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.


தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


“ரணசிங்க பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்போது விடுதலைப்புகளுக்கு ஆயுதம் வழங்கியதை ஐக்கிய தேசிய கட்சியினரே தெரிவிக்கின்றனர்.


அப்படியானால் சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க இடமிருக்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்கமுடியாது.
எதிர்வரும் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.


இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக கருதப்படும் மத்திய கொழும்பு இம்முறை தேர்தலில் அதன் வரலாறு மாறப்போவது உறுதியாகும்.


சஜித் தலைமையிலான அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதைவிட கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் அதிகாரத்தை பைற்றவே முயற்சிக்கின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர யாப்பா பதவி இராஜனமா?

wpengine

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

wpengine

அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

wpengine