Breaking
Sat. Nov 23rd, 2024

எம்.ரீ. ஹைதர் அலி077 3681209

நேற்று புதன்கிழமை 1.00 மணியளவில் ஒளிபரப்பாகிய சக்தி டீ.வி. மதிய நேரச் செய்தியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றுவது போன்ற ஒரு காட்சி ஒளிபரப்பப்பட்டது.

 
குறிப்பாக இக்காட்சியில், நோயாளியினுடைய முகம் வெளிக்காட்டப்பட்டிருந்ததுடன் அவரது உடை, கலாச்சாரம் என்பனவும் அடையாளம் காணும் அளவிற்கு சக்தி டீ.வி ஊடக நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.


இது தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் சக்தி ஊடக நிறுவனத்திற்கு அதனை சுட்டிக்காட்டி எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


M.F.M. சிப்லி (பொறியியலாளர்)முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கிழக்கு மாகாணம்காத்தான்குடிதயாரிப்பாளர்சக்தி டீ.வி.பத்தரமுல்லபன்னிபிட்டிய.

செய்தி தொடர்பான முறைப்பாடுஇன்று புதன்கிழமை 01.04.2020 பகல் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிய சக்தி மதிய நேரச் செய்தியில் கொரோனா வைரஸினால் தாக்கத்திற்குட்பட்ட பெண்ணொருவரை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றுவது போன்ற ஒரு காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக இக்காட்சியில், நோயாளியினுடைய முகம் வெளிக்காட்டப்பட்டிருந்ததுடன் அவரது உடை, கலாச்சாரம் என்பனவும் அடையாளம்காணும் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்த நோயாளியையும் ஏனைய நோயாளர்களையும் உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்யும் செயலாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. 

கொரோனா தொற்று ஒர் ஆட்கொல்லி நோய் என்பதால் எதிர்காலத்தில் நோயுற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தொடர்பில் மற்றவர்கள் அறிந்தால் ஊடகங்களில் தாங்கள் காட்சிப்படுத்தப்படலாம் அல்லது விமர்சிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தங்களது நோயை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் தொற்றினை ஏற்படுத்தி பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் வாய்ப்பளிக்கலாம்.

 உண்மையில் வைத்தியத் துறையிலோ அல்லது ஊடகத்துறையிலோ இவ்வாறான செயற்பாடுகள் அனுமதிக்க முடியாத விடயமாக இருக்கையில் சக்தி தொலைக்காட்சியில் இவ்வாறான ஓர் காட்சி ஒளிபரப்பப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே, இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்யும்போது ஊடக தர்மத்தை பேணியும் பொதுமக்களின் மனோநிலையை அறிந்தும் செயற்படுவது மிக அவசியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *