அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மார்ச் 11 முதல் தடை!

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடை 2025 மார்ச் 11 நள்ளிரவு முதல் குறித்த பரீட்சைகள் நிறைவு பெறும் வரை அமலில் இருக்கும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு 474,147 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர நேற்று (06) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்களை 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.

Related posts

கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை..!

Maash

எடை கூடிய பெண் இமான் மரணம்! 37வயதில்

wpengine

மன்னார்-நானாட்டான் பகுதியில் பாண்டிய மன்னாரின் நாணயம்

wpengine