இன்றைய தினம் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இப் பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை ஒன்றை இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜமுனானந்தாவின் மகன்களான இரட்டையர்கள் பிரணவன் மற்றும் சரவணன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களையும் தேசிய மட்டத்தில் 3ம் 5ம் இடங்களையும் பெற்று சிறப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் 7 வருடங்களுக்கு முற்பட்டது. அவரது முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டது.

