பிரதான செய்திகள்

“கோ” என சொல்லும் போதே ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு இன்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.


இந்த மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் போது நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி மக்களிடம் கோரியுள்ளது.

சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு நிகராக, பாற்சோறு சமைத்து, பலகாரம் செய்து பட்டாசு கொளுத்தி இந்த நிகழ்வினை மக்கள் கொண்டாடி மகிழ வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கட்சி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வேட்பாளரின் பெயர் “கோ” என சொல்லும் போதே ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு குறிப்பிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய மாநாட்டின் போது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவிக்காமல் இருப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டொக்டர் சாபி தலைமையிலான குழுவின் மனிதநேய சிரமதானப்பணி (படங்கள்)

wpengine

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine

சம்மாந்துறை வைத்தியசாலை மு.காவின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டதா?

wpengine