பிரதான செய்திகள்

கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அதாவது இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்ட தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி முதல் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு மாத்திரைகளையும் பெற்றுக்கொண்ட தடுப்பூசி அட்டைகளை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி அட்டைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்- அமைச்சர் றிசாட்

wpengine

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor

மீளப் பெறப்பட்ட டயனா கமகேவின் பிடியாணை!

Maash