பிரதான செய்திகள்

கோழி முட்டையின் விலை அதிகரிப்பு! ஜனாபதிக்கு கடிதம்

இலங்கையில் கோழி முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக பேக்கரி உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது
தொடர்பில் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


தற்போது உள்நாட்டு சந்தையில் கோழி முட்டையின் விலையில் பாரியளவில் அதிகரித்துள்ளது.
23 – 28 ரூபா வரையான விலையில் கோழி முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.


உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அதனை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.


இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கோழி முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

அபாண்டங்களையும், வீண்பழிகளையும் பரப்பினாலும் சமூக பயணத்தை நிறுத்தபோவதில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க தேரர் கைது

wpengine

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor