Breaking
Tue. Nov 26th, 2024

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்டதும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டதுமான கிராமங்களிலுள்ள மக்களுக்கு வரட்சியான காலங்களில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் குடிநீர் வினியோகம் வெழங்கப்படுகின்றது. இக்கிராமங்களில் அனேகமானவை மீள்குடியேற்ற கிராமங்களாகும், கடந்த யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த இக்கிராம மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படாத நிலையில் மீளக்குடியேறி வந்ததுடன் இன்றுவரை தமக்குத் தேவையான குடிநீரைக் கூட திருப்திகரமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வருடம் அதிக வரட்சியான காலநிலையை இக்கிராமங்கள் எதிர்நோக்குகின்றமையால், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை மூலம் தமது குடிநீர்த் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக சபையினை மக்கள் நாடிச் செல்கின்றனர். அந்த வகையில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வாகனேரி கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களால் நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்த வேண்டுகோளானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் விடே ஆணையாளராக (செயலாளர்) 22.08.2016ஆந்திகதி (திங்கட்கிழமை) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரு. ஜே. சர்வேஸ்வரன் அவர்களால் இம்மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கான தீர்வு நிறைவேற்றப்பட்டுள்ளது.

2016.08.24ஆந்திகதி (புதன்கிழமை) இம்மக்களின் வேண்டுகோளை ஏற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர், ஊழியர் குழாமுடன் இக்கிராமத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட விஷேட ஆணையாளர் இம்மக்கள் நீண்ட காலமாக இப்பிரச்சினையை எதிர்நோக்கி வந்தமையை அவதானித்ததுடன், நீண்ட காலமாக இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கு தனது கவலையினையும் தெரிவித்தார். இக்கிராம மக்களின் குடிநீர்த் தேவையின் அவசியத்தை கவனத்திற் கொண்டு உடனடியாக குடிநீர்த் தாங்கிகளை பெற்றுக் கொடுத்ததுடன் குடிநீரை சபையினால் இன்று முதல் தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.unnamed (7)

இவ்விடயம் குறித்து இக்கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன், புதிய செயலாளரின் இந்நடவடிக்கைக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.unnamed (6)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *